கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் மிசியோன் தோத்திரப் பண்டிகையின் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1)மழைக்கு ஒரு தகப்பனுண்டோ என்று தேவன் யாரைப் பார்த்து கேட்டார்?
______________________.
2)மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து கேட்டபொழுது இகழ்ந்தவர்கள் யார்?
________________________.
3) அக்காலத்திலே, இதோ, இவரே நம்முடைய தேவன், இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார், இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம், இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும். என்று கூறியது யார்?
_______________________.
4) பவுல் யாரை உத்தம குமாரன் என்று கூறுகிறார்?
_______________________.
5)ஓசியாவின் மனைவி யார்?
________________________.
நேற்றைய விடைகள்:
1) எஸ்தர் (எஸ்தர்.4:16)
2)லீஸ்திரா (அப்போஸ்தலர்.14:11)
3) பேதுரு
(யோவான்.13:36)
4) தானியேல் (தானியேல்.9:21)
5)புத்திமதி (நீதிமொழிகள்.15:10)
Comments
Post a Comment